கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!

கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக நிலத்தை அளந்து கற்கள் ஊன்றும் பணி நடைபெற்றது.
 | 

கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!

கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 4 கட்டமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. மத்திய தொல்லியல் துறை மூன்று கட்டமாகவும் மாநில தொல்லியல் துறை ஒரு கட்டமாகவும் நடத்திய அகழ்வாராய்ச்சி பணியில் 13,638 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்பாண்டபொருட்கள், கட்டிட அமைப்புகள், நாழி, தங்கம் என  அகழ்வாராய்ச்சிப் பணியில் கண்டெடுக்கப்பட்ட  பல வரலாற்று பொருட்கள், சுவடுகள் அனைத்தையும் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு அதில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. 

இதற்காக வருவாய்த்துறை ஒதுக்கிய இடத்தில் இரண்டு ஏக்கர் 10 சென்ட் பரப்பளவுக்கு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு இன்று கற்கள் ஊன்றும் பணி நடைபெற்றது. மேலும் அந்த இடத்தை சுத்தம் செய்து கட்டிடப்பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP