சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்காததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 | 

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்காததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பிக்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நேற்று முன்தினம் முதல்வர் பேசிய போது, கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக குறிப்பிட்டார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். முதல்வர் இவ்வாறு கூறியதற்கு அப்போதே நாங்கள்  எதிர்ப்பு தெரிவித்தோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறினோம். 

இருந்த போதிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் நாங்கள் விசாரித்த போது, ராகுல் காந்தி அவ்வாறு பேசவில்லை என்று உறுதி செய்து கொண்டோம். இன்று அது தொடர்பாக பேரவையில் பதில் அளிக்க முற்பட்டபோது, எங்களை பேச அனுமதிக்கவில்லை. மேலும் ஹைட்ர் கார்பன் திட்டம் குறித்தும் பேச அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி குறித்து முதல்வர் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதுவும் மறுக்கப்பட்டது. எனவே இதனை கண்டித்துஅவையில் இருந்து  செய்கிறோம்" என்று கூறினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP