வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கழுத்தறுத்து கொன்றேன்.. கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்

திட்டக்குடி அருகே வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கழுத்தறுத்து கொலைசெய்ததாக கள்ளக்காதலி வாக்கு மூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கழுத்தறுத்து கொன்றேன்.. கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்

திட்டக்குடி அருகே வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கழுத்தறுத்து கொலைசெய்ததாக கள்ளக்காதலி வாக்கு மூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (30), இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கொத்தனார் வேலை செய்து வந்த இவர் கடந்த 26ஆம் தேதி அவரது வீட்காலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே, மணிகண்டனின் அண்ணியான வைய்யங்குடி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜின் மனைவி காசியம்மாள் (20) என்பவர் கொலை செய்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணியிடம் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். 

அதாவது, மணிகண்டனுக்கும் காசியம்மாளுக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்ததாகவும், அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனிடையே வேறு பெண்ணுடன் மணிகண்டனுக்கு தொடர்பு ஏற்பட்டதாக அறிந்து கடந்த 26ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்து மணிகண்டனிடம் அது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அங்கிருந்த கட்டையால், மணிகண்டனை தலையில் அடித்துவிட்டு பின்னர் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

இதன்பிறகு, அவரது  உறவினர்களான  பன்னீர்செல்வம்(57),பெரியநாயகம் (35), செல்லம்மாள் (50) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது போன்று நாடகம் நடத்தி அனைவரையும் நம்ப செய்துள்ளார். ஆனால் போலீசார் அவரது சாவில் சந்தேக மடைந்து, தீவிர விசாரணை மேற்கொண்டதால் எப்படியும் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்து சரணடைந்ததாக கூறியுள்ளார்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP