தாமிரபரணி மகாபுஷ்கர நிறைவு 

குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணியில் கடந்த 11ம் தேதி தொடங்கிய மகாபுஷ்கர விழா இன்று நிறைவடைந்தது.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரத்தையொட்டி நீராடியுள்ளனர். அமைச்சர்களும் பங்கேற்பு
 | 

தாமிரபரணி மகாபுஷ்கர நிறைவு 

குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணியில் கடந்த 11ம் தேதி தொடங்கிய மகாபுஷ்கர விழா இன்று நிறைவடைந்தது.

மகாபுஷ்கர புஷ்கரவிழாவின் நிறைவு நாளான இன்று பாபநாசம் துவங்கி அத்தாளநல்லுார், திருப்புடைமருதுார், நெல்லை தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பறை கோயில் படித்துறை, துாத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, அகரம், ஸ்ரீவைகுண்டம் என பல்வேறு தீர்த்தக்கட்டங்களிலும் மக்கள் நீராடினர்.

நிறைவு நாளில் நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபத்தில் நடைபெற்ற ஆரத்தி விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிய சத்யஞான சுவாமிகள், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள், விஎச்பி மூத்த தலைவர் வேதாந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். நிறைவாக தாமிரபரணிக்கு ஆரத்தி வைபவம் நடைபெற்றது. தைப்பூச மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். கடந்த 12 தினங்களிலும் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரத்தையொட்டி நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP