பார்லிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு! எப்படி அப்ளை பண்ணுவது?

பார்லிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு! எப்படி அப்ளை பண்ணுவது?
 | 

பார்லிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு! எப்படி அப்ளை பண்ணுவது?


மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலும், உயர் கல்வியை மேம்படுத்தும் வகையிலும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
 அதன் அடிப்படையில் மாணவர்களும், இளைஞர்களும், இந்திய அரசியலமைப்பு சட்டம், பார்லிமென்ட் முறை, அதன் செயல்பாடுகள், ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில், இளைஞர் பார்லிமென்ட் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது .
விண்ணப்பம் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பார்லிமென்டில் நேரடி களப் பயிற்சிக்கு அனுமதிக்கப் படுவார்கள்.  தேசிய இளைஞர் பார்லிமென்ட் திட்டத்தில், புதிதாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில், பார்லிமென்டின் அனைத்து வகை செயல்பாடுகள், நடைமுறைகள் தொடர்பான தகவல்கள், கருத்துகளாகவும், வீடியோ பதிவுகளாகவும் வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு, சான்றிதழ்களும் வழங்கப்படும் என்பதால், அதிக அளவில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்குமாறு, மத்திய மனிதவள அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான விபரங்களை nyps.mpa.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP