கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலைகள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்லூரி அருகே மாணவர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலைகள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்லூரி அருகே மாணவர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்  மாணவர் அபிமணியை கல்லூரி அருகே மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். கொல்லப்பட்ட மாணவர் அபிமணி சந்தையடியூரை சேர்ந்தவர் ஆவார். 
மாணவர் வெட்டிகொன்ற சம்பவம் குறித்து அறிந்து, உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 17 கொலைகள் நடந்துள்ள நிலையில், தற்போது பட்டப்பகலில் கல்லூரி அருகே மாணவர் வெட்டிகொன்ற சம்பவத்தால், அம்மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP