கோவை : சினிமா பாணியில் கோடிக்கணக்கில் பண மோசடி

குனியமுத்தூர் அருகே முதலீட்டு நிறுவனம் என கூறி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 | 

கோவை : சினிமா பாணியில் கோடிக்கணக்கில் பண மோசடி

குனியமுத்தூர் அருகே, முதலீட்டு நிறுவனம் எனக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே புதூர் தோட்ட வீதியைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் செந்தில்குமார் (46). இவர் மற்றும் இவரது உறவினர்கள் சிலர் இணைந்து யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் ஐரோப்பிய நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்வதாகக் கூறி, கடந்த சில வருடங்களாக பல்வேறு நபர்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.

ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு கோடி, ஒன்றரை கோடி தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி, மும்பை போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றும் ஆடம்பர வாழ்க்கையை காட்டி பண ஆசையை தூண்டியுள்ளனர்.

இந்த ஆடம்பர செலவுகளில் மயங்கிய 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், செந்தில்குமாரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் பணத்தை சொன்னபடி திரும்ப தராமல் ஏமாற்றி வந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் செந்தில்குமார் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் செந்தில் குமாரின் வீட்டிற்குள் புகுந்து அவரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் குனியமுத்தூர் போலீசார் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த மோசடியானது "சதுரங்க வேட்டை" சினிமா பாணியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP