கோவை: கார் விபத்தில் உதவி நகரமைப்பு அலுவலர் பலி!

கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவர் பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டு இன்று காலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே வந்த போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், காரின் முன்னால் அமர்ந்திருந்த உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுனர் இயேசுதாஸ் படுகாயம் அடைந்தார். விபத்து நடைபெற்றபோது சாலையில் சென்ற  மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து இயேசுதாஸை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP