5 புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி வரும் 22ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கிறார்.
 | 

5 புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  5 மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி வரும் 22ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். தென்காசி மாவட்டத்தை நவ.22ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை நவ.27ஆம் தேதி காலை 10 .45 மணிக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தை நவ.28ஆம் தேதி காலை 10.30 மணிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தை மதியம் 12.30 மணிக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தை நவ.29ஆம் தேதி மதியம் 12.14 மணிக்கும் தொடங்கி வைக்கிறார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP