‘சென்னை நகரம் 2000 ஆண்டுகள் பழமையானது’

2000 ஆண்டுக்கும் பழமையான நகரம் சென்னை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

‘சென்னை நகரம் 2000 ஆண்டுகள் பழமையானது’

2000 ஆண்டுக்கும் பழமையான நகரம் சென்னை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘கிருஷ்ணகிரி கல்வெட்டின் மூலம் சென்னை 2000 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தனி தலைவர், பேராசிரியர்கள் நியமன பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் ஹார்வர்ட் தமிழ் இருக்கை முழுமையாக செயல்பட தொடங்கும். சொற்குவை இணையதளம் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து பணியாற்றி பயன்பெற வேண்டும். தமிழ் கல்வெட்டுகளை புத்தகங்களாக அச்சிட்டு வெளியிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் 2 மாகாணங்களில் அலுவல்மொழியாக உள்ள தமிழை 10 மாகாணங்களில் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP