Logo

தமிழக போலீசாரை சீன அதிகாரிகளே பாராட்டினர்: முதலமைச்சர் பழனிசாமி 

தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகள் பாராட்டியதாக முதலைமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

தமிழக போலீசாரை சீன அதிகாரிகளே பாராட்டினர்: முதலமைச்சர் பழனிசாமி 

தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகள் பாராட்டியதாக முதலைமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள், அத்திவரதர் சிறப்பு பணி பதக்கத்தை 596 காவலர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

இதன்பின் பேசிய முதலமைச்சர், ‘தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகளே பாராட்டினர். மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் சந்திப்புக்கு காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு வழங்கினர். நாட்டிலேயே பிறமாநில காவல்துறைக்கு தமிழக காவல்துறை முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. காவல்துறையினரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னை முழுவதும் 1.37 லட்சம் சிசிடிவி கேமராக்கள் வைத்துள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளன. காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி மாநிலத்தில் பூசல்கள் ஏதுமின்றி பாதுகாத்து வருகின்றனர்’ என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP