70 அடிக்கு கீழே சென்ற குழந்தை: மீட்கும் பணி தீவிரம்!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.
 | 

70 அடிக்கு கீழே சென்ற குழந்தை: மீட்கும் பணி தீவிரம்!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. 

திருச்சி மாவட்டம் மாணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலாமேரி ஆகியோரின் 2வது மகன் சுஜித் வில்சன்(2). இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, சுமார் 610 அடி உடைய  பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்துவிட்டான். 

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு பணியினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், சரோஜா ஆகியோர் மீட்பு பணிகளை துரிதபடுத்தி ஆலோசனை வழங்கினர். 28 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தையின் கைகளில் கயிறு கட்டு வெளியே தூக்க முயற்சி மேற்கொண்டபோது, குழந்தை தவறி விழுந்து 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 

ஆழ்துறை கிணற்றிற்குள் மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், மண் விழுந்துள்ளதால் குழந்தையின் நிலை குறித்து அறிய இயலவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 14 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நீடித்து வருகிறது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP