புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!

புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் உடலுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். புருஷோத்தமனின் மறைவு அதிமுகவிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
 | 

புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!

புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் உடலுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (70). புதுச்சேரி அதிமுக செயலாளரும், முன்னாள் மணவெளி தொகுதி எம்எல்ஏவுமான இவருக்கு விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் சிறுவள்ளிகுப்பம் பகுதியில் விளைநிலம் உள்ளது. நேற்றைய தினம், விளைநிலத்திற்கு சென்ற புருஷோத்தமன் அங்கு விவசாய பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், மரத்தடியில் ஒதுங்கிய புருஷோத்தமனை விஷ வண்டு தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவர் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள புருஷோத்தமன் உடலுக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். புருஷோத்தமனின் மறைவு அதிமுகவிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP