முதல்வர் பழனிச்சாமி தான் ராஜா; ஸ்டாலின் கூஜா! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேர்தல் முடிவு வந்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார்; அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கூஜாவாக இருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
 | 

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அழகர் சாமி மற்றும் சாத்தூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு சேகரித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யார் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள்; யார் பக்கம் குண்டர்கள் இருக்கிறார்கள் என்று வாக்கு எண்ணிக்கை  நடைபெறும் மே 23ம் தேதி அன்று தெரிய வரும்.

தினகரனை பொறுத்தவரையில், அவர் எந்த கட்சியாக இருந்தாலும், அவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் சசிகலாவை வெளியில் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் சிறையிலே இருக்கட்டும் என்று , சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார். தனது கட்சியினரை ஏமாற்றி அரசியல் நடத்தி வருகிறார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் தான். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அதிமுகவிற்கு தான் தகுதி இருக்கிறது. 

தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார். ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். 40 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP