மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர்!

டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவைத்தார்.
 | 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர்!

டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று மேட்டூர் அணையில் இருந்து  தண்ணீர் திறந்துவைத்தார்.

கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது. 100 அடியை தாண்டியுள்ள நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என்றும் மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் மூலம் 12 மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP