தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 | 

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பும் வகையில் அரசு கல்வி தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகம் மற்றும் ஸ்டூடியோ அண்ணா நூலகத்தின் 8 வது தளத்தில் உள்ளது. 

இந்த தொலைக்காட்சியில்,  நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் , சுயத்தொழில், வேலைவாய்ப்பு போன்றவை ஒளிபரப்பப்டும் என்றும்  காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள்களில் 200வது எண்ணில் இந்த சேனல் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது. 

இந்த அரசு கல்வி சேனல் தொடக்க விழா சென்னை  அண்ணா  நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி கல்வி சேனலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரவை தலைவர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பள்ளிகளிலேயே நிகழ்ச்சிகளை மாணவர்கள் காணும் வகையில், 53 ஆயிரம் பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்ப பள்ளிக்கல்வித்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP