தகவல் தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னையில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியினை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 | 

தகவல் தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னையில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியினை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தகவல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியினை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டு தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழகத்தில் முதலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்ய முன்வரும் தொழிற்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும், தமிழகத்தில் மனிதவளம் மற்றும் திறமையான இளைஞர்கள் உள்ளதாக குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP