சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு!

2014ல் சஞ்சாரம் என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை யடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 | 

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

2014ல் சஞ்சாரம் என்ற நாவலை எழுதியதற்காக பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி பேசும் நாவலாகும். 

இந்நிலையில் எஸ்.ராவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைசிறந்த எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவித்ததற்கு திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP