சென்னை: திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ மையம்!

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில் மூன்றாவது பாலினத்தவருக்கான மருத்துவ மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.
 | 

சென்னை: திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ மையம்!

ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில் மூன்றாவது பாலினத்தவருக்கான மருத்துவ மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 அறைகள் கொண்ட மருத்துவ மையம் மூன்றாவது பாலினத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மையத்தை குடும்பநலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். 

தொடர்ந்து, மூன்றாவது பாலினத்தவரையும் மதிக்க வேண்டும், அவர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற மூன்றாம் பாலின சமூகத்திற்கான ஆதரவு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

சென்னை: திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ மையம்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மூன்றாவது பாலினத்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

ஏற்கனவே இரண்டு திருநங்கைகளுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வேலை வழங்கியது போல, மூன்றாம் பாலினத்தவருக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை: திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ மையம்!

போலி மருத்துவமனைகள் சார்ந்த அனைத்து புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து இடங்களிலும் உணவு பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP