சென்னை : "ரயில் 18" அறிமுக விழா 

இந்தியாவிலேயே முற்றிலுமாக தயாரிக்கப்பட்ட 80 விழுக்காடு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ரயில் 18" எனப்படும் நவீன ரக ரயில் இன்று ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் கட்டணம் சதாப்தி ரயில் போன்று இருக்கும்.
 | 

சென்னை : "ரயில் 18" அறிமுக விழா 

இந்தியாவிலேயே முற்றிலுமாக தயாரிக்கப்பட்ட 80 விழுக்காடு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ரயில் 18" எனப்படும் நவீன ரக ரயில் இன்று ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முற்றிலுமாக தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை ஐ.சி.எஃப்-ல் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் 80 விழுக்காடு மூலப்பொருட்களை கொண்டு "ரயில்-18" என்ற நவீன ரக ரயில் தயாரிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய நவீன ரகத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கூடியது. இதில் ரயில் இஞ்ஜின்கள் தனியாக இல்லாமல் பெட்டியோடு சேர்ந்தே இருக்கும்.

சென்னை : "ரயில் 18" அறிமுக விழா 

ரயில்-18 என அழைக்கப்படும் ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 பெட்டிகள் உயர் வகுப்பு பெட்டிகளாகவும், 14 பெட்டிகள் சாதாரண பெட்டிகளாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச வை-பை வசதி, பயணி செல்ல வேண்டிய இடத்தை ரயில் நெருங்கும் முன் அவருக்கு எச்சரிக்கையூட்டும் வசதி, ஜி.பி.எஸ். அடிப்படையில் பயணிகளுக்கு ரயிலின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதி, நவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு வினியோகிக்கும் பகுதிகள் அடங்கிய பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த ரயிலில் பாதுகாப்பு வசதிக்காக சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோகானி, இந்த ரயில் முழுவதும் இந்தியாவில் தயார் செய்யப்பட்டது எனவும் இதை பராமரிக்கும் செலவு மிகவும் குறைவு எனவும் தெரிவித்தார். மேலும், இந்த ரயிலானது மற்ற ரயிலை காட்டிலும் 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை எரிபொருளை மிச்சப்படுத்தும் எனவும் தெரிவித்த அவர், இந்த ரயில் முழுவதும் ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீலினால் தயார் செய்யப்பட்டுள்ளதால் துருப்பிடிக்காமல் நீண்ட நாள்  பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் கட்டணம் சதாப்தி ரயில் போன்று தான் இருக்கும் எனவும் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் மற்ற ரயில்கள் இந்த தொழில் நுட்பத்திற்கு மாற்றப்படும் எனவும் அஸ்வானி லோகானி தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP