சென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்! எங்கு தெரியுமா?

சென்னை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வி.ஆர்.மாலில் பி.வி.ஆர் சினிமாஸ் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் தியேட்டர்களிலே இது தான் டாப் என்ற அளவிற்கு இது அமைக்கப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் ஷாப்பிங் மால் மிகப்பெரிய ஒரு பொழுதுபோக்கு இடமாக மாறிவிட்டது. இதில் சினிமா தியேட்டர்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம். கூட்டம் அலைமோதும். அந்த வகையில் சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் 'வி.ஆர் சென்னை' மால் திறக்கப்பட்டது. மற்ற 'மால்'களை ஒப்பிடும் போது மிகப்பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகநீளமான மால் இதுதான் என்றும் தகவல். அண்ணா நகரில் 'ஸ்கை வாக்' கை அடுத்து இந்த மால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்! எங்கு தெரியுமா?

இந்த மாலில் விரைவில் பி.வி.ஆர் திறக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 ஸ்கிரீன், 2594 இருக்கைகளுடன் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. விரைவில் பி.வி.ஆர் டிக்கெட் புக்கிங்கில் இந்த மாலும் இணையவுள்ளது. 

சென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்! எங்கு தெரியுமா?

முன்னதாக பி.வி.ஆர் அமைந்தகரை, வேளச்சேரி, பல்லாவரம், ரெட் ஹில்ஸ் ஆகிய இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP