சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை - ஆட்சியர் அறிவிப்பு!!

சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருந்த அறிவிப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி.
 | 

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுவை, தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கொட்டி தீர்த்த மழை, மாலையும் பெய்து வருகிறது. இதனிடையில், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்ற செய்தி வெளியாகியிருந்ததை தொடர்ந்து, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி.

சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை இல்லை எனவும், அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் எனவும் அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP