37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு... இனி சுற்றுலாத்தளங்களின் ராஜா

தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 | 

37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு... இனி சுற்றுலாத்தளங்களின் ராஜா

தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

காஞ்சிரபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டு என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டத்தின் நிர்வாக பணிகளை  வேண்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

37வது மாவட்டமாக உதயமாகியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தளங்களான மாமல்லபுரம், வேடந்தாங்கல், வண்டலூர் பூங்கா, கோவளம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சென்னை, காஞ்சிபுரம்,  விழுப்புரம் மாவட்ட எல்லைகளை கொண்ட செங்கல்பட்டில்,  மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு என்ற 3 வருவாய் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் (புதிது), மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களும் உள்ளன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என 6 பேரவை தொகுதிகளும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மக்களவை தொகுகிளில் பாதியும்  இடம்பெற்றுள்ளது. 

Newstm.in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP