Logo

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு !!

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜன.3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 | 

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி ஜன.2ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜன.4 ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்றும், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கினால், 2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்றும்  தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP