சந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்!

இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தவுள்ள சந்திரயான் -2 வெற்றி பெற திருவையாறு சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
 | 

சந்திரயான் -2 வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம்!

இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தவுள்ள சந்திரயான் -2 வெற்றி பெற திருவையாறு சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. 

சந்திரனின் தென் துருவத்தை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் -2 விண்கலத்தை, திங்கள்கிழமை (ஜூலை 15) அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கவுன்ட் டவுனும் தொடங்கிய நிலையில்,  எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இறுதி நேரத்தில் விண்கலத்தை செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதையடுத்து, சந்திரயான் -2 விண்கலம் வரும் ஜூலை 22 பிற்பகல் 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. அதன்படி நேற்று இரவு இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தவுள்ள நிலையில் சந்திரயான் -2 வெற்றி பெற திருவையாறு அருகே உள்ள திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP