செயின் பறிப்பு சம்பவம்: காவல் அதிகாரியின் உணர்ச்சிபூர்வமான ஆடியோ!

உசிலம்பட்டியை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் செயின் பறிப்பு சம்பவம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ள ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.
 | 

செயின் பறிப்பு சம்பவம்: காவல் அதிகாரியின் உணர்ச்சிபூர்வமான ஆடியோ!

உசிலம்பட்டியை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் செயின் பறிப்பு சம்பவம் குறித்து உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ள ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் தற்போது செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு வெளியே செல்ல அச்சமடைந்து, நகைகளை வீட்டில் வைத்து கொண்டே வெளியே நடமாடுகின்றனர். மறுபுறம் வீட்டில் திருடன் புகுந்துவிடுவானோ என்ற அச்சத்திலேயே அன்றைய பணிகளையும் மேற்கொள்கின்றனர். 

செயின் பறிப்பு சம்பவம்: காவல் அதிகாரியின் உணர்ச்சிபூர்வமான ஆடியோ!

தற்போது, பெண்கள் வெறும் தாலி செயினை மட்டுமே அணிந்து வெளியே வரும் சூழல் உள்ளது. ஆனால், தாலி செயினை பறிக்கவும் வழிப்பறி கொள்ளையர்கள் ஆங்காங்கே காத்துகொண்டு நிற்கிறார்கள். பெண்களின் கழுத்தில் இருக்கும் நகையை பறிக்க தீவிரம் காட்டும் கொள்ளையர்கள் அவர்களின் உயிர்களை சற்றும் மதிப்பதில்லை. 

செயின் பறிப்பு சம்பவம்: காவல் அதிகாரியின் உணர்ச்சிபூர்வமான ஆடியோ!

இது போன்று உசிலம்பட்டியில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்து  பெண்ணின் செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணின் செயின் கையில் மாட்டிக்கொண்ட நிலையில், வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் செயினோடு சேர்ந்து அந்த பெண்ணை சற்று தூரத்திற்கு தரையில் உராய்ந்து இழுத்து சென்று செயினை பறித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த பெண்ணின் கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளின் தோல்கள் உரிந்து உடலில் ரத்தம் வழிந்தது. 

செயின் பறிப்பு சம்பவம்: காவல் அதிகாரியின் உணர்ச்சிபூர்வமான ஆடியோ!

இந்த பெண்ணின் காயத்தை கண்டு வேதனையடைந்த காவல் அதிகாரி ஒருவர், அவரின் காயத்தை புகைப்படம் எடுத்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கழிவறைக்கு அழைத்து செல்லக்கூடாது, சகல பாதுகாப்பு வழங்க வேண்டும் என விவாதம் நடத்துகின்றனர். இது போன்ற விவாதம் நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடமும் அவர்களின் சித்ரவதையை கேட்டறிந்து பேச வேண்டும் என உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ள வீடியோ மற்றும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP