செல்போனால் விபரீதம்! 2வது மாடியிலிருந்து விழுந்த இளம்பெண்!

புதுச்சேரி மாவட்டம் ஜீவநந்தபுரம் பகுதியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவரின் மகள் செல்வி. செல்விக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
 | 

செல்போனால் விபரீதம்! 2வது மாடியிலிருந்து விழுந்த இளம்பெண்!

புதுச்சேரி மாவட்டம் ஜீவநந்தபுரம் பகுதியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவரின் மகள் செல்வி. செல்விக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ள செல்வி குழந்தைப் பிறந்த 8 மாதங்கள் ஆன பிறகும் குழந்தையின் நலனுக்காக தாய் வீட்டிலேயே தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

செல்வியின் கணவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்வியையும் தனது குழந்தையையும் பார்த்துவிட்டுச் செல்வார். மற்ற நேரங்களில் தன்னுடைய குழந்தை என்ன செய்கிறது என்பதை செல்வி போன் மூலம் கணவனுக்குத் தெரிவிப்பார்.

அப்படித்தான் சம்பவத்தன்றும்  தன் குழந்தையைப் பற்றி கணவருடன் இரண்டாவது மாடியில் இருந்து செல்வி பகிர்ந்துக் கொண்டிருந்தார். உயரம் குறைவாக உள்ள தடுப்புச் சுவருக்கு அருகில் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி செல்வி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தன்னுடைய மனைவி இறப்பதற்கு முன்  அவருடைய கணவரிடம் தான் இறுதியாகப் பேசிக் கொண்டிருந்தார்  என்ற செய்தியும், அம்மா இறந்து விட்டார் என்ற செய்தியையும் தெரிந்துக் கொள்ள முடியாத வயதில் இருக்கும் அந்தக் குழந்தையை எண்ணியும் செல்விக் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து   காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து சம்மந்தமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP