Logo

பொங்கல் தினத்தை மாத்தாதீங்க! எடப்பாடியைக் கலாய்த்த ஸ்டாலின்!!

பிரதமருக்காக பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 | 

பொங்கல் தினத்தை மாத்தாதீங்க! எடப்பாடியைக் கலாய்த்த ஸ்டாலின்!!

பிரதமருக்காக பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி மாணவர்கள் பிரதமர் மோடியை உரையை கேட்க பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்ததது. அதோடு மாணவர்கள் அனைவரும் வந்துள்ளார்களாக என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, பிரதமரின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலிருந்தபடியே கேட்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 16ஆம் தேதிக்கு பதில் வரும் 20ஆம் தேதி உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், "பிரதமர் பேசுவதாக கூறி பொங்கலன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, குளிர்காய நினைத்த எடப்பாடி அரசின் அதிகார அநியாயத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்ததும் பூசி மெழுகினர். இதோ 20ம் தேதி பேசப்போகிறார் பிரதமர்! அவரை மகிழ்விக்க, பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள்! என பதிவிட்டுள்ளார். 

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP