வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை: ஆர்.பி.உதயக்குமார்

அதிமுகவில் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை: ஆர்.பி.உதயக்குமார்

அதிமுகவில் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளதாக வெளியான ஊடக செய்திகள் குறித்து பதிலளித்த அவர், "உட்கட்சி, வெளிகட்சி பூசல் இல்லை எனவும், மதுரை தொகுதிக்கு திறமையான தகுதியான நபரான ராஜ்சத்யன் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை எனவும், சாமானியர்களே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கூட்டணி காரணமாக தற்போதைய எம்.பிக்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், வலுவான, பாதுகாப்பான, எழுச்சியான கூட்டணி அமைந்து உள்ளதாக கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP