ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை மூட முடியுமா? பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை மூட முடியுமா? பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள்  மூடப்படும் நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " விண்வெளி ஆராய்ச்சி துறையின் வெற்றியாக சந்திராயன் 2 செயற்கோள் வெற்றிகரமாக அனுப்ப பட உள்ளது. நாடு முழுதும் உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது.  

தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராமல் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும், அப்போது தான் பலரின் தோல் உரிக்கப்படும்.

தமிழகத்தில் மொழி கொள்கை என்று ஒன்றும் இல்லை, வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே பிற மொழிகள் கற்று கொடுக்கப்படுகிறது, இந்தாண்டு முதல் இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா?, மும்மொழி கொள்கையில் இரட்டை வேடம் போடப்படுகிறது. 

இலங்கை தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்?, உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோவிடம் ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது இலங்கை தமிழர்களின் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார். 

தபால்துறையில் கடந்த முறை தமிழில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. கடிதப் போக்குவரத்துக்கு ஏதுவாக ஆங்கிலத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என்பதை பாஜக தான் கொண்டு வந்தது. இந்தியா முழுதும் இந்தி மயமானலும் தமிழகத்தில் தமிழ் மட்டுமே என இருக்கிறது. 

ஜவகர்லால் நேரு தொடங்கி மோடி வரை உள்ள பிரதமர்களில் பிரதமர் மோடி மட்டுமே தமிழில் 100 வார்த்தைகள் கற்று கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். பிழைப்புக்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் சிலர் தமிழை முன் நிறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல வர இருக்கிறது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்" என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP