முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அடுத்த மாதம் 23,24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 | 

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று(திங்கள்கிழமை) நடைபெற்றது.

இதில், அடுத்த மாதம் (ஜனவரி) 23,24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், முக்கிய தீர்மானமாக 16 தொழில் துறை நிறுவனங்களுக்கு விரிவாக்கப் பணிக்கான ஒப்புதல் வழங்கப்படட்டது. இதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP