இடைத்தேர்தல்: இன்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 'லீவு'

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மருவாக்குப்பதிவையொட்டி, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்
 | 

இடைத்தேர்தல்: இன்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 'லீவு'

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19 -ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது. 

இதையடுத்து, 4 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 வாக்குச்சாவடிகள் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, இன்று மாலை முதல் மே 19 -ஆம் தேதி இரவு வரை, இப்பகுதிகளில் டாஸ்மாக்  கடைகள் இயங்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP