கத்தி முனையில் தொழிலதிபர் கடத்தல்..

சென்னையில் கத்தி முனையில் தொழிலதிபரை கடத்தி ரூ.35 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

கத்தி முனையில் தொழிலதிபர் கடத்தல்..

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் முகேஷ். இவர், அம்பத்தூரில் லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பணி நிமித்தமாக முகேஷ் நேற்று இரவு வில்லிவாக்கம் சென்றுள்ளார். அப்போது, முகேஷை அவரது காருடன் பிரபல ரவுடி தில் பாண்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் கடத்தி சென்றுள்ளனர். காரை கோயம்பேடு நோக்கி ஒட்டி சென்ற அவர்கள் முகேஷியிடம் ரூ.25 லட்சம் தரும் படி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

அப்போது காரில் இருந்து குதித்து தப்பிய முகேஷ் மதுரவாயல் நிலைய காவல் நிலையம் சென்று நடந்தவற்றை கூறி புகார் அளித்தார். மேலும், ரவுடி கும்பலுக்கு பணம் தர மறுத்ததால்  கார், லேப்டாப், செல்போனை பறித்து சென்றுவிட்டதாக முகேஷ் தெரிவித்தார். இதையடுத்து முகேஷ் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தில்பாண்டி மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP