பெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்! அதிகாலை அதிர்ச்சி!!

பெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்.. பெரும் விபத்து தவிர்ப்பு..
 | 

பெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்! அதிகாலை அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சேக்பேட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த போது கார் திடீரென தீ எரிந்தது. இதையடுத்து காரில் இருந்தவரும், அங்கிருந்த பொது மக்களும் அலறி அடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ வேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை.

பெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்! அதிகாலை அதிர்ச்சி!!

இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீ பற்றியதும் காரில் இருந்தவர் உடனே கிழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP