புல்லட் நாகராஜன் கைது...துப்பாக்கி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!

காவல் உயர் அதிகாரிகளை செல்போனில் மிரட்டியதோடு மட்டுமில்லாமல் 'என்னை எந்த கொம்பனாலும் பிடிக்க முடியாது' என்று கூறிய புல்லட் நாகராஜன் இன்று தேனி பெரியகுளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

புல்லட் நாகராஜன் கைது...துப்பாக்கி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!

காவல் உயர் அதிகாரிகளை செல்போனில் மிரட்டியதோடு மட்டுமில்லாமல் 'என்னை எந்த கொம்பனாலும்  பிடிக்க முடியாது' என்று கூறிய புல்லட் நாகராஜன் இன்று தேனி பெரியகுளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

தேனி பெரியகுளம் மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் மீது கொலை முயற்சி, கொள்ளை என பல வழக்குகள் உள்ளன. அவையனைத்துக்கும் தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில், தனது மனைவியை கொலை செய்த வழக்கில் புல்லட் நாகராஜனின் அண்ணன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், அங்குள்ள செவிலியரிடம் மாத்திரை கேட்டு கொடுக்காததால், அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். 

இதையடுத்து எஸ்.பி ஊர்மிளா சிறைத்துறை அதிகாரிகளை கொண்டு அவரை அடித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் தெரிவிக்க, புல்லட் நாகராஜன் எஸ்.பி ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து சிறைக்கைதிகளை தாக்கியது தொடர்பாக ஜெயமங்கலம் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் வாட்ஸ்ஆப் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், எவராலும் என்னை பிடிக்க முடியாது என்ற நீண்ட வசனங்களையும் பேசி அனுப்பியுள்ளார். 

தொடர்ச்சியாக அவரை பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் புல்லட் நாகராஜனை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த புல்லட் நாகராஜனை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் அவரை விரட்டி சென்று பிடித்துள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியும், ரூ.1 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP