தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
 | 

நடப்பு ஆண்டிற்கான முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். 

மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்" என்றார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பேசியதற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். 

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு முன்னர் மாநில அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP