மணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

திருச்சி. மணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.43 ஆயிரம் ரொக்கம், மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதி நேர அலுவலகம் மகாளிப்பட்டியில் உள்ளது. இங்கு லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திருச்சி லஞ்சஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்ட் மணிகண்டன் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், ஓட்டுனர் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமையாளரிடம்  விசாரணை நடத்தினர்.

சுமார் 2 ½ மணி நேரத்திற்கு பின்னர் விசாரணையின் முடிவில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP