பிரியாணியில் மயக்க மருந்து.. இளம்பெண் பலாத்காரம்!

பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காரணத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.
 | 

பிரியாணியில் மயக்க மருந்து.. இளம்பெண் பலாத்காரம்!

பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காரணத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

புதுச்சேரியில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்திருப்பவர் மதுர (40). இந்த ஸ்டூடியோவில் தனலட்சுமி என்பவர் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி முதல் மதுர தனது ஸ்டூடியோவில் தனலட்சுமிக்கு பிரியாணி, டீ, காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தனலட்சுமிக்கு பின்னர் தான் தெரிந்தது. இதையடுத்து, இதுகுறித்து தந்தையிடம் கூறிய தனலட்சுமி கூறவே, அவருக்கும், மதுரக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், மதுர ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற செய்தியை கேட்டு தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதனால், மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவத்திற்கு காரணமாக மதுரவை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம்  தனலட்சுமி அளித்த வாக்குமூலத்தில்,  ‘முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை? என கேட்டதற்கு, மதுரக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் புகார் கொடுத்தால் அவரது குடும்பம் நாசமாகி விடும் என்பதால், அப்போதே புகார் தரவில்லை என்றும், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நான் இன்னொருவரை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் தீக்குளித்தேன் ’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP