Logo

விதிகளை மீறுவதா..? ரஜினிகாந்த், அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் !

விதிகளை மீறுவதா..? ரஜினிகாந்த், அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டம் !
 | 

சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அனிருத்! சங்கடத்தில் நெளியும் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 9 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் ரஜினி, அனிருத் இருவருக்கும் கண்டம் தெரிவித்துள்ளது. சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அனிருத்! சங்கடத்தில் நெளியும் ரஜினி!

அதில், தர்பார் படத்தில் 450 இசைக்கலைஞர்கள் பணியாற்றி இருகின்றனர். ஆனால் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், திரைபட இசைக் கலைஞர் சங்க தலைவர் தினா கூறும்போது, பேட்ட படத்தின் போதே சங்க கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கூறினேன். அப்போது அடுத்த படத்தில் வாய்ப்பு அளிப்பதாக கூறிய அவர் தர்பார் படத்தில் தரவில்லை என தெரிவித்துள்ளார். 

சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அனிருத்! சங்கடத்தில் நெளியும் ரஜினி!

திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், 50 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட 1,200 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார். 23 யூனியன்களை கொண்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தில் (‘பெப்சி’யில்) இசைக்கலைஞர்கள் சங்கமும் அங்கம் வகிக்கிறது. அனிருத்தின் பொறுப்பற்ற பதில்கள், சங்கத்தை அவமதித்ததாக கருதப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க செயற்குழு கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நம்ம வீட்டு புள்ள’ என்று ரஜினி பெருமையாக தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தை புகழ்ந்து பேசினார். இளையராஜாவுக்கு அப்புறமா அனிருத் கிட்ட தான் அந்த திறமை இருக்கு. இளையராஜாவைப் பார்க்கிற மாதிரியே இந்த சின்ன வயசுலேயே அனிருத்தைப் பார்க்கிறேன் என்று பாராட்டினார். அனிருத்துக்கு எதிராக இசைக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கை ரஜினியை சங்கடப்பட வைத்திருக்கிறதாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP