கிட்டத்தட்ட 60 அடியை எட்டிய போர்வெல்!

போர் வெல் மூலம் சுமார் 60 அடியை எட்டியுள்ள நிலையில், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் முழுமையான குழி தோண்டு பணி நடைபெற்று வருகிறது.
 | 

கிட்டத்தட்ட 60 அடியை எட்டிய போர்வெல்!

போர் வெல் மூலம் சுமார் 60 அடியை எட்டியுள்ள நிலையில், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் முழுமையான ஒரே அளவு விட்டம் கொண்ட குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு அருகே சிறுவனை மீட்பதற்காக மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி, கடினமான பாறைகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2 ரிக் இயந்திரங்களும் பாறையை உடைப்பதில் சற்று சருக்கலை சந்தித்ததையடுத்து, போர்வெல் மூலம் துளையிட திட்டமிடப்பட்டது. 

இன்று மதியம் 6 இன்ஞ்ச் அளவு கொண்ட போர்வெல் மூலம் அந்த குழியின் சுற்றளவில் 5 துளைகள் இடப்பட்டன. ஒரு துளை 18 அடி அளவிலும், மற்ற துளைகள் சுமார் 12 அடியிலும் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ரிக் இயந்திரங்கள் மூலம் சுமார் 43 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில், போர்வெல் மூலம் மொத்தம் 60 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. தற்போது, 2வது ரிக் இயந்திரம் மூலம் குழியில் உள்ள மண் மற்றும் பாறைகள் குடைந்து வெளியே எடுக்கப்படவுள்ளது. 60 அடி ஆழத்திற்கு குழியின் விட்டம் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் போர்வெல் மூலம் 5 துளைகள் போடப்பட்டு ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளை விட்டம் சீரமைக்கப்படவுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP