தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு: அக்டோபர் 24ஆம் தேதி தொடக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை அக்டோபர் 24ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்.
 | 

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு: அக்டோபர் 24ஆம் தேதி தொடக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை அக்டோபர் 24ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்.

அக்டோபர் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 2,225 பேருந்துகளுடன் 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் திறக்கப்படவுள்ளன.

சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பேருந்துகள் இயக்கம் குறித்து தெரிந்துகொள்ளவும், புகார் அளிக்கவும் 9445014450 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி. கே.கே.நகரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் சிறப்புப் பேருந்துகள் கே.கே. நகரில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

இதேபோல், திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்தும், திருவண்ணாமலை, பண்ரூட்டி, வடலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, திருப்பத்தூர், ஒசூர் போன்ற பகுதிகளுக்கு பூந்தமல்லியில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP