பாஜக வெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த் புகழாரம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி மோடிக்காக கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

பாஜக வெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த் புகழாரம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி மோடிக்காக கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி மோடிக்காக கிடைத்த வெற்றி. இந்தியாவில் முன்னதாக ஆட்சி செய்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, வாஜ்பாயிக்கு பின்னர் மோடி ஒரு வலிமையான தலைவர்.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும், கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்போம் என்று கூறிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகள். அவர் கூறியது உண்மையிலே பாராட்டுக்குரியது. 

மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கோதாவரி, காவிரி, கிருஷ்ந நதிகளை இணைக்க வேண்டும். 

தமிழகம், ஆந்திரா, கேரளா தவிர மற்ற மாநிலங்களில் மோடி அலை வீசியுள்ளது. ஒரு அலை வேகமாக அடிக்கும் போது, அதனுடன் நீந்தி சென்றவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். அலைக்கு எதிராக யாரும் நீந்த முடியாது. 

தேர்தலில், தமிழக்த்தில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு என்னுடைய பாராட்டுகள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. காங்கிரஸில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்க்ளை எதிர்கொள்வது ராகுலுக்கு எளிதானது அல்ல. அனைவரையும் எதிர்கொண்டு அவர் வெற்றிபெற வேண்டும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP