பாஜக முட்டாள்கள்... ட்விட்டரில் பொங்கியெழும் நடிகர் சித்தார்த்!

பாஜக முட்டாள்கள்... ட்விட்டரில் பொங்கியெழும் நடிகர் சித்தார்த்!
 | 

பாஜக முட்டாள்கள்... ட்விட்டரில் பொங்கியெழும் நடிகர் சித்தார்த்!

சமீப காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசையும், அதற்கு இசைந்து போகும் மாநில அரசையும் தனது ட்வீட்களால் விமர்சித்து வருகிறார் நடிகர் சித்தார்த். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைப்பெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.  இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் உட்பட நடிகர் சித்தார்த் மீதும் வழக்கு பதியப்பட்டது. சித்தார்த் பாஜகவின் திட்டங்களையும், போக்கையும் தொடர்ந்து கண்டித்து விமர்சித்து வருவதால், பாஜக தொண்டர்கள் நடிகர் சிதார்த் மீது கோபத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது  நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு படு மோசமாக கருத்துகளைப் பயன்படுத்தி சித்தார்த்தை பாஜக தொண்டர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சித்தார்த் பிரதமர் மோடியை  டேக் செய்து டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பாஜக முட்டாள்கள், மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதைக் குடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி ஆடையணிய வேண்டும்? என்று பாடம் நடத்துகிறார்கள். என் குடும்பத்தையும், நண்பர்களையும்  தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP