வரிசையில் நின்று வாக்களித்தார் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்!

ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
 | 

வரிசையில் நின்று வாக்களித்தார் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்!

ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழ்கட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டுகிறார். அவர் இன்று பாளையங்கோட்டை ஜெயந்திர பள்ளியில் காலை 7.45 மணியளவில் குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக பாஜக  சார்பில் களத்தில் நிற்கின்றேன். நான் நெல்லை தொகுதியில் வசிப்பதால், எனது வாக்கு பாளையங்கோட்டை ஜெயந்திரா பள்ளியில் இருப்பதால் காலையில் குடும்பத்துடன் வந்து எனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக  கடமையை செய்துள்ளேன்.

ராமநாதபுரத்தில் நான் வாக்கு சேகரிக்கும் போது மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளேன். தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வெற்றி பெறும். அதுபோல், எனது தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP