பைக் டயர் வெடித்தது.. தூக்கிவீசப்பட்ட மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

பைக் டயர் வெடித்தது.. தூக்கிவீசப்பட்ட மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
 | 

பைக் டயர் வெடித்தது.. தூக்கிவீசப்பட்ட மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

கோவையில் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கோவை போத்தனூர் சாலை சாய் நகரைச் சேர்ந்தவர் ஆசிக் பாட்ஷா. இவரது நண்பர்கள் முகமது நசீர் மஸ்தான் மற்றும் முகமத் அஸ்கர். இவர்கள் மூன்று பேரும் அங்குள்ள பள்ளி படித்து வருகின்றனர். மாணவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆத்துப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி சென்றனர். போத்தனூர் சாய் நகர் சந்திப்பு அருகே சென்றபோது சாலையில் நடுவே உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் இருசக்கர வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்தததில், வாகனத்தில் சென்ற மூன்று மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

பைக் டயர் வெடித்தது.. தூக்கிவீசப்பட்ட மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

இதனை கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டனர். எனினும் படுகாயமடைந்த முகம்மது நசீர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய ஆசிக் பாட்ஷா, முகமது அஸ்கர் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிக் பாட்ஷாவும் உயிரிழந்தார். முகமது அஸ்கருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP