வசந்தி ஸ்டான்லி மறைவு திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு - ஸ்டாலின் உருக்கம்!

திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 | 

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்டான்லி வசந்தி ஸ்டான்லியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று வசந்தி ஸ்டான்லி-க்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது  குடும்பத்தினரையும் சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வசந்தி ஸ்டான்லி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறேன். அவர் தொடக்கத்தில் வருவாய் துறை, வணிகவரித்துறை போன்ற பல்வேறு அரசுப் பணிகளில் இருந்தவர். 

வசந்தி ஸ்டான்லி மறைவு திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு - ஸ்டாலின் உருக்கம்!

திராவிடக் கழகத்தின் மீது, குறிப்பாக கலைஞர் மீது அன்பு கொண்டு இந்த இயக்கத்தில் இணைந்தார். மகளிர் அணி துணைத் தலைவராக இருந்து பணியாற்றினார். சிறுபான்மை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். அது தவிர கவிஞராக, எழுத்தாளராக, கழகத்திலே ஆற்றல் மிக்க பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர்.

நாடு முழுவதும் திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிடக் கொள்கைகளை மக்களிடையே அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லக் கூடியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு வீராங்கனையாக விளங்கியவர். அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP