சைக்கிள் சின்னம் கேட்கும் தா.மா.க. !

மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 | 

சைக்கிள் சின்னம் கேட்கும் தா.மா.க. !

மக்களவைத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன், "நாடாளுமன்ற தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தற்போது அறிவிக்க இயலாது எனவும், தாங்கள் வைத்த நிலைப்பாட்டிற்கு அ.தி.மு.க, இறுதி வடிவம் அளித்த பின்னரே தங்களது கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்" எனவும் தெரிவித்தார்.

மேலும், தங்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான முடிவை அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP