பொன் ராதாகிருஷ்ணனின் காரை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு

வேதாரண்யத்திலே கஜா புயலால் பாதித்த மக்களை பார்க்கச் சென்ற மத்திய அமைச்சர் காரை பொதுமக்கள் மறித்தனர். காரில் இருந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரைவிட்டு இறங்கி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.
 | 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 33வது வார்டுக்கு மின்கம்பங்கள் வரவில்லை காரணத்தினால் நெடுவாக்கோட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மறைக்கப்பட்டனர். அப்போது அவர்களை விடச் சொல்லி அவர்கள் பாதுகாப்பாளர்கள் பொதுமக்களிடம் பேசினர். அதற்கு எங்களுக்கு மின் கம்பங்கள் கொடுக்கும் வரை நாங்கள் யார் காரை விட மாட்டோம் என சொல்லி வாக்கு ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து வேதாரண்யத்திலே கஜா புயலால் பாதித்த மக்களை பார்க்கச்  சென்ற மத்திய அமைச்சர் காரை பொதுமக்கள் மறித்தனர். காரில் இருந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரைவிட்டு இறங்கி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பங்கள் வழங்கப்படும் என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP