சாலையோரம் அமர்ந்து டீ குடித்த முதல்வர்!

தேர்தல் பிரசாரத்தின்போது திருநகர் பகுதியில் சாலை ஓரம் அமர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தினார். உடன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, மற்றும் மூத்த நிர்வாகி வைத்தியலிங்கம் ஆகியோரும் தேனீர் அருந்தினர்.
 | 

சாலையோரம் அமர்ந்து டீ குடித்த முதல்வர்!

தேர்தல் பிரசாரத்தின்போது திருநகர் பகுதியில் சாலை ஓரம் அமர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தினார்.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அத்தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  

நாகமலை, புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, வடபழஞ்சி கிராமத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசினார்.

அதனை தொடர்ந்து, மதுரை திருநகர் பகுதியில் உள்ள சிறிய டீக்கடையில் சாலை ஓரம் அமர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனீர் அருந்தினார். உடன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, மற்றும் மூத்த நிர்வாகி வைத்தியலிங்கம் ஆகியோரும் தேனீர் அருந்தினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP