பி.இ. கலந்தாய்வு : மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

பி.இ. கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்திவிட்டு பங்கேற்காத மற்றும் 4 சுற்றுகளிலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் இடம் ஒதுக்குப்படாத மாணவர்களுக்கும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 | 

பி.இ. கலந்தாய்வு : மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

பி.இ. கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்திவிட்டு பங்கேற்காத மற்றும் 4 சுற்றுகளிலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் இடம் ஒதுக்கப்படாத மாணவர்களுக்கும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணி தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை 30 -ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தின் நகல், மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று, மாற்றுச் சான்றிதழுடன் மாணாவர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் வருகையை 044-2235 1014/1015 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP